தமிழகத்தில் இன்று
பிஜி பிரதமர் 48 மணி நேரத்தில் விடுதலை: புரட்சிக்காரர்கள் அறிவிப்பு
சுவா:
புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்ளிட்ட 30 பேர் 48 மணி நேரத்திற்குள்விடுவிக்கப்படுவார்கள் என்று பிஜித் தீவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
பிரதமர் செளத்ரி தலைமையிலான ஆட்சியை அதிபர் மாரா கலைத்த சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பைஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.
பிஜி நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுநெருங்கி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் அவரை விடுவிக்க இயலாவிட்டாலும் கூட, 48 மணி நேரத்திற்குள்கண்டிப்பாக அனைவரும் விடுதலை செய்யப்படுவர்.
பிஜி பழங்குடித் தலைவர்கள் கொண்ட 15 பேர் குழுவுடன் பேச்சு நடத்தினேன். இது மிகவும் பலனுடையதாகஇருந்தது. இவர்களை ஞாயிற்றுக்கிழமையும் சந்திக்கவுள்ளேன் என்றார் ஜார்ஜ் ஸ்பீட்.
மே 19-ம் தேதி ஆயுதம் தாங்கிய புரட்சிக்காரர்களுடன் ஜார்ஜ் ஸ்பீட் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்துஆட்சியைப் பிடித்தார். பிரதமர் செளத்ரி உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டார். பிஜிஇனத்தவரே ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இழுபறியாக நீடித்து இந்தப் பிரச்சினைக்கு சனிக்கிழமை முடிவு வந்தது. பிரதமர் செளத்ரியை டிஸ்மிஸ் செய்துஅதிபர் மாரா உத்தரவிட்டார். இனிமேலும், செளத்ரி உள்ளிட்டவர்களை புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்திருக்கத்தேவையில்லை என்று அவர் அறிவித்தார். இதையடுத்து தற்போது அனைவரையும் விடுவிக்க புரட்சிக்காரர்கள்ஒத்துக் கொண்டுள்ளனர்.
மாராவுக்கு ராணுவம் தொடர்ந்து ஆதரவு:
இதற்கிடையே, அதிபர் மாராவுக்கு ராணுவம் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமைபுதிய அமைச்சரவையும், இடைக்கால பிரதமரும் அறிவிக்கப்படவுள்ளனர்.
இருப்பினும் மாராவின் நடவடிக்கைக்கு புரட்சிக்காரர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அவரது முடிவை ஸ்பீட்நிராகரித்துள்ளர்.
பிஜி இனத்தவரே பிரதமர் பதவிக்கு வர வேண்டும். புரட்சிக்காரர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற தனதுநிபந்தனையில் ஜார்ஜ் ஸ்பீட் உறுதியாக இருப்பதாக அவர்களது சிறப்பு ஆலோசகர் ஜோ நடா கூறியுள்ளார்.அதிபர் மாரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஸ்பீட் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications