தமிழகத்தில் இன்று
தகவல் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு 70 நாள் போனஸ்
டெல்லி:
மத்திய தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு 70 நாள் போனஸ்வழங்கப்படவுள்ளது.
1999-2000-ம் ஆண்டுக்கான போனஸ் தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த 3 தொழிலாளர் சங்கங்களுடன் மத்திய தொலைத் தொடர்புத் துறைஅமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சமீபத்தில் பேச்சு நடத்தினார்.
அந்த பேச்சு வார்த்தையின்போது உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, தகுதி வாய்ந்தஅனைத்த தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 70 நாள் போனஸ்வழங்கப்படும் என்று ராம் விலாஸ் பாஸ்வான் திங்கள்கிழமை அறிவித்தார்.
இது தொடக்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய தொலைத் தொடர்பு ஊழியர்களுக்கு 70 போனஸ் தவிர தொலைத் தொடர்புத்துறை மற்றும் தொலைத் தொடர்புச் சேவைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சலுகைவிலையில், வாடகை இல்லாத தொலைபேசி வசதி செய்து தரப்படும். வரும் ஜூன்முதல் தேதியிலிருந்து இந்த வசதி செய்து தரப்படும்.
இதன் மூலம் மொத்தம் 3.2 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த வசதியைப்பெற முன்பதிவு தேவையில்லை. வாடகைக் கட்டணமே, தொலைபேசி இணைப்புக்கட்டணமோ வசூலிக்கப்படாது என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications