For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்-திய விமானத்தை கடத்திய-வர்-க-ளை -பி-டிக்-க சிபி-ஐ தீவி-ர மு-யற்-சி

டெல்லி:

-இந்-தி-யன் ஏர்-லைன்ஸ் விமானக்கடத்தல் குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் போலீசார் உதவியை சிபிஐ நாடி-யுள்-ள-து.

இதுதொடர்பாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவிப்பு வெளியிட (-அலர்ட் நோட்-டீஸ்) வேண்டும் என்றும் சிபிஐ தனதுகோரியுள்ளது.

கடந்த டிசம்பர் 24 ம் தேதி நேபா-ளத்-தி-லி-ருந்-து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த 814 ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்குகடத்தல்காரர்களால் கடத்தப்பட்டது. இந்த விமானக்கடத்தலின் போது கடத்தல்காரர்களைத் தட்டிக் கேட்ட புதுமாப்பிள்ளை கடத்தல்காரர்களால்சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியா கடத்தல்காரர்களின் கோரிக்கைப் படி மூன்று தீவிரவாதிகளை விடுவித்த பின் தான் இந்த விமானக்கடத்தல்காரர்கள் பயணிகளை விடுவித்தனர்.

இந்த விமானக்கடத்தல் குறித்து நேபா-ள அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிபிஐ கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கு இன்டர்போல் போலீசாரிடம் உதவி கோரியுள்ளது. விமானக்கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில்மறைந்--தி-ருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது.

பஞ்சாப் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் இந்தக் விமானக்கடத்தல்காரர்களைக் கைது செய்யும் படி உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் கடத்தல்காரர்கள்இப்ராஹிம் அக்தர், சன்னி அகமது குவாசி, சாஹூர் இப்ராஹிம், சாகித் அக்தர் சையத், மற்றும் ஷகீர் ஆகியோர் மற்றம் அவர்களது கூட்டாளிகள் யூசுப்அசார், அப்துல் ராஃப் கைது செய்ய சிபிஐ இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது.

கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 150 பயணிகள் பயணம் செய்தார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக நடந்த இந்த கடத்தல் நாடகம் டிசம்பர்31 ம் தேதி முடிவுக்கு வந்தது.

ஜெயிலில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேர் விடுவிக்கப்பட்ட பின்தான் இந்த ஹைஜாக்- நாட-கம் மு-டிந்-த-து-.

விமானக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ராஃப் மற்றும் அசார் ஆகியோர் விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவரானமவுலானா மசூத் ஆசாரின் உறவினர்களாக இருக்கலாம் என்று போலீசாருக்குத் ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர்களில் அசார் பாகிஸ்தானில் பாவால்பூரைச் சேர்ந்தவர் என்றும், பிற குற்றவாளிகள் கராச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் சிபிஐக்குத் தகவல்கள்கிடைத்துள்ளது.

இதையடுத்து சிபிஐ இணை இயக்குநர் (க்ரைம் பிராஞ்ச்) எம்எல்.சர்மா காட்மாண்டு மற்றும் துபாயில் நடத்திய விசாரணையில் இந்த விமானக்கடத்தல்சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணமாக இருக்கும் என்ற துப்பு கிடைத்தது.

இந்த விமானக்கடத்தல் வழக்கு குறித்து நேபாளம் விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ யினர் நேபாளத்தின்விசாரணை முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

புலனாய்வுத்துறை நிறுவனங்கள் சிபிஐ, ஆர்ஏடபிள்யூ(விசாரணை மற்றும் ஆராய்ச்சிப்பிரிவு) ஐபி (இன்டலிஜன்ஸ்பீரோ) என்எஸ்ஜி ( நேஷனல் செக்யூரிட்டி கார்டு) ஆகியோரும் இந்த விமானக்கடத்தல் வழக்கு குறித்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை அப்துல் லத்தீப் பாட்டீல், பூபால்மார் தமாய், தாலிப் குமார், பலால், ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விமானக்கடத்தலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய சிபிஐ இன்டர்போலிடம் உதவி கோரியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X