செல்போன் மூலம் கிரிக்கெட் சூதாட்டம்: 7 பேர் கைது
தானே:
தொலைபேசி மற்றும் செல்போன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே, நாக்பாடா என்ற இடத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதிச் சங்க குடியிருப்பில் சிலர்கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தானே போலீஸாருக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், குறிப்பிட்ட ஒரு வீட்டுக்குப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 7 பேர்இருந்தனர். அவர்கள் ஆன்டிகுவாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேநடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
டிவியில் பார்த்துக் கொண்டே அந்த கிரிக்கெட் ஆட்டத்தில் மீது தொலைபேசி மற்றும் செல்போன் மூலம் கிரிக்கெட்சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக, கிரிக்கெட் சூதாட்டத்துக்கு முக்கியகாரணமாக இருந்த அஸ்வின் மானே மற்றும் ஜெயேஷ் மாகன், நிலேஷ் ஜோஷி, பங்கஜ், காரட் டின்டோவ்சா,அனித் ஷிர்வா, ராஜேஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 7 தொலைபேசிகள், 7 செல்போன், 4 தொலைபேசி ரெக்கார்டர்கள், கலர் டிவி உள்ளிட்டஅனைத்து மின்னணுச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications