தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியர்ரா லியோன் தீவிரவாதிகளால் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமைதி காக்கும் படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
சியர்ரா லியோனில் எட்டு வருடமாக நடந்து வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டும் வகையில் 1999-ம் ஆண்டு ஐ.நா தலையீட்டின் பேரில் உடன்பாடுகாணப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தம் சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஐ.நா. அமைதி காக்கும் படை அங்குஅனுப்பப்பட்டது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில், இம்மாத துவக்கத்தில் புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகள் திடீர் கலவரத்தில் இறங்கினர். அமைதிகாக்கும் படையினர் 500 பேரை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களை பகுதி, பகுதியாக விடுவித்து வந்தனர். இதையடுத்து கூடுதல் அமைதிகாக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அனைவரையும் தீவிரவாதிகள் விடுவித்து விட்டதாக தெரிவதாக சியர்ரா லியோனுக்கான ஐ.நா. நடவடிக்கைக் குழு செய்தித்தொடர்பாளர் டேவிட் விம்ஹஸ்ட் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அனைவரையும் தீவிரவாதிகள் விடுவித்து விட்டதாக நம்புகிறோம். இருப்பினும் இதுதொடர்பாக உறுதியான தகவல் ஏதும்எங்களுக்கு வரவில்லை.
சியர்ரா லியோனுக்குப் பக்கத்து நாடான லைபீரியாவின் தலைநகர் மோன்ரோவியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 85 அமைதி காக்கும் படை வீரர்கள்வந்தனர். இதையடுத்து மேலும் 4 பேர் குறித்துத் தெரியாமல் இருந்தது. இருப்பினும் ரோக்பேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு உடல்கள்அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மே 22-ம் தேதி ஐ.நா. அமைதி காக்கும் படையினரின் சீருடை அணிந்த பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை இருந்தன என்றார் டேவிட்.
அன்னான் மகிழ்ச்சி:
இதற்கிடையே, அமைதி காக்கும் படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
அன்னான் கூறுகையில், இந்தப் பிரச்சினையில் தீர்வு ஏற்பட உதவிய, மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் குறிப்பாக லைபீரிய அதிபர் சார்லஸ் டைலர்நன்றிக்குரியவர் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications