தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
உச்-ச நீதி--மன்-றத்தில்- ஜெ.-வுக்-கு ஆத-ர-வா-க வாதா-டி-ய அர-சு வக்-கீல்

சென்னை:

"டான்சி -நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் கீழ் மோசடிக் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டதுசரியல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு -சார்-பில் ஆஜராஜ வக்கீல் சாந்திபூஷன் வாதாடியது உண்மை என்று சென்னை தனி நீதிமன்றத்தில்திங்கள்கிழமை இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. ஜம்புகுமரன் சாட்சியம் அளித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இவ்வாறு வாதாடியது சரியல்ல என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை என்றும்; அதுதொடர்பானஆட்சேபணையை தமிழக அரசுக்கு தாம் ஏற்கனவே தெ-ரிவித்து விட்டதாகவும் குறுக்கு விசாரணையில் ஜம்புகுமரன் தெ-ரிவித்தார்.

முதல்வராக இருந்தபோது அரசு -நிறுவனமான "டான்சிக்கு சொந்தமான -நிலத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயாபப்ளிகேஷன்ஸ் என்ற -நிறுவனத்திற்காக ஜெயலலிதா வாங்கினார்.

இதை எதிர்த்து திமுக ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின்விசாரணை அதிகாரியாக செயல்பட்டவர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. ஜம்புகுமரன். திங்கள் கிழமை தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்ஜம்புகுமரனை, ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

அப்போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:

இவ்வழக்கில இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்; வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுஎனக்குத் தெரியும். அதனடிப்படையில் ஜெயலலிதாவை இவ்வழக்கில் இருந்து ஜனவ-ரி 13ம் தேதி உயர் நீதிமன்றம் விடுவித்ததும் தெ-ரியும்.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் வழக்கு தொடர்ந்தது. அப்பீல் வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்சாந்திபூஷன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், இவ்வழக்கில் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் கீழ் மோசடிக் குற்றம்சுமத்தப்பட்டது பொருந்தாது என்று வாதாடியது உண்மை.

ஆனால், சாந்திபூஷனின் இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்து சாந்திபூஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப அவசியம்இல்லை. ஏனென்றால், சாந்திபூஷனின் இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டதே தவிர, தீர்ப்பில் அதுபற்றி குறிப்பிடவில்லை. மேலும்இதுதொடர்பாக தனி நீதமன்றம் -முடிவெடுக்கும் என்பதால் -நாட்டீஸ் அனுப்பவில்லை.

ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) உடன் இணைந்த 13 (1)(டி) ஆகியவற்றின் கீழ் முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசு -நிலத்தை குறைத்துமதிப்பிட்டு வாங்கியுள்ளார் என்றும், அதன்காரணமாக சார் பதிவாளரை ஏமாற்றி விட்டு, குறைவான பத்திரப்பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளார்என்றும் -ஜெ-ய--ல-லி-தா மீ-து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் கீழ் அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை ஏமாற்றியுள்ளார்என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்றார் ஜம்-பு-கு-மா-ர-ன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+