தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜித் தீவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. அங்கு ராணுவச் சட்டமும்அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவத் தளபதி கமாண்டர் பிராங்க் பைனமாரா திங்கள்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில்பேசுகையில், மிகவும் வருத்தத்துடன் பிஜியில் ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளேன். நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். ராணுவ சட்டமும் பிரகடனப்படுத்தப்படுகிறது.
தற்போதைக்கு நாட்டை ராணுவமே ஆட்சி செய்யும். நாட்டை அமைதி மற்றும் நிலையானபாதைக்குக் கொண்டு செல்வதே இப்போதைய ராணுவ ஆட்சியின் முக்கிய நோக்கம். பிஜியின் நலனேஎங்களுக்கு முக்கியம்.
தலைநகர் சுவாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. சட்டம், ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக தேவைப்பட்டால் செயல்படுமாறு ராணுவத்திற்கு உத்தரவுகொடுக்கப்பட்டுள்ளது என்றார் பைனமாரா.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டவுடனேயே, லீவில் சென்றவர்கள்மற்றும் ரிசர்வில் வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் உடனடியாக பணிக்கு வருமாறுஅழைக்கப்பட்டுள்ளனர்.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்துஆட்சியைப் பிடித்தனர். இந்தியரான பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட எம்.பிக்களை பிடித்துவைத்துக் கொண்டனர். பிறகு சிலரை விடுவித்தனர். பிஜி இனத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.
பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்குமாறு அதிபர் உள்பட பலர் விடுத்த வேண்டுகோள்நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மகேந்திர பால் செளத்ரியின் ஆட்சி கலைக்கப்பட்டு, இடைக்காலஅரசை அதிபர் மாரா சில தினங்களுக்கு முன் அமைத்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தலைநகர் சுவாவில் மோதல் ஏற்பட்டது. டி.வி.நிலையம் தாக்கப்பட்டது. ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர ஊரடங்குஉத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஆட்சியைப் பிடித்துள்ளதாக ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications