ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்போவதாக சர்வதேச டி.வி. நிறுவனங்கள் எச்சரிக்கை
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில், விளையாட்டு மைதானங்களுக்கு வெளியே படப்பிடிப்போ, வீரர் மற்றும்வீராங்கனைகளுடன் பேட்டியோ எடுப்பது தொடர்பான கடும் விதிகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்போம் என்று சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள்எச்சரித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன.இப் போட்டிகளை ஒளிபரப்ப என்.பி.சி. நிறுவனத்துக்கு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுமம் அனுமதிவழங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்பு உரிமம் பெற என்.பி.சி. நிறுவனம் ரூ.3075 கோடிவழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டி தொடர்பான அனைத்தையும் ஒளிபரப்ப என்.பி.சி. நிறுவனத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது.ஆனால் சி.என்.என்., இ.எஸ்.பி.என்., பாக்ஸ் போன்ற சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள், ஒலிம்பிக் போட்டிகள்நடைபெறும் ஸ்டேடியங்களுக்கு வெளியே வீரர், வீராங்கனைகள் போன்றவர்களிடம் பேட்டி எடுக்கவாய்ப்புள்ளது. அப்படி அந் நிறுவனங்கள் பேட்டி எடுத்தால், என்.பி.சி. நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு கடுமையான விதிமுறைகளை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழமம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு 8 சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்துஅனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. இந்த விதிமுறையை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுமம் மாற்றிக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால் முழுவதுமாக ஒளிம்பிக் போட்டியை ஒளிபரப்புவதைப் புறக்கணிப்போம் என்று அவைஎச்சரித்துள்ளன.
இப்படி கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் பத்திரிகை மற்றும் டிவிக்களின் உரிமையில் ஒலிம்பிக்ஒருங்கிணைப்பாளர்கள் தலையிடமுடியாது. இது ஒலிம்பிக் போட்டி ஒளிபரப்பை கடுமையாகப் பாதிக்கும்.குறிப்பாக, வட அமெரிக்கப் பகுதியில் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு இருக்காது என்று யு.எஸ்.ஓ.சி. என்றஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மைக் மோரன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications