தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சுற்றுலாத்துறையில் நிறைய முறைகேடு நடந்துள்ளதாகவும் , இதன் மீதுஉரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று புதுவைமாநில பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பா.ம.க அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வி.ராஜசேகரன் விடுத்துள்ளஅறிக்கையில், புதுவை சுற்றுலாத்துறையில் சட்டத்திற்குப் புறம்பாகவும்,விதிமுறைகளை மீறியும் மோசடி நடந்துள்ளது. பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது.
ஊழலுக்கு காரணமான சுற்றுலாத்துறை செயலர் விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். சி.பி.ஐ விசாரணை நடத்தி ஊழல்செய்தவர்களைக் கைது செய்யவேண்டும்.
டெல்லி சாணக்யாபுரியில் உள்ள, புதுவை அரசுக்குச் சொந்தமான கெஸ்ட்ஹவுசிலும்,சென்னை கே.கே.நகரில் உள்ள கெஸ்ட்ஹவுசிலும் ஏராளமான ஊழல்நடந்திருப்பதாகவும் பா.ம.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலை சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும் என்று பா.ம.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications