தமிழகத்தில் இன்று
பாட்னா:
பீகாரில் ரகுபூர் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ராப்ரி தேவி 24,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
பீகாரில் மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை துவங்கியது.
இவற்றில் நிர்சா மற்றும் ரகுபூர் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவமுன்னணியில் இருந்தன. மூன்றாவது தொகுதியான ஜமுயில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் மயிரிழையில்முன்னணியில் இருந்தார்.
ரகுபூரில் முதல்வர் ராப்ரி தேவி 24,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
நிர்சாவில் ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுக் கட்சி வேட்பாளர் அரூப் சாட்டர்ஜி 1500 வாக்குகள்வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
ஜமூய் தொகுதியில் சுஷில் குமார் சிங் 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications