ஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி
டாக்கா:
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
7-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டியஇலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் இடையேயான ஆட்டம் பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பங்களாதேஷ் அணியை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஜாவித் ஓமர் 85 ரன்களும், அக்ரம் கான் 41 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் வாஸ் சிறப்பாகப் பந்து வீசிஇரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
50 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், தனது இன்னிங்ஸை இலங்கை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாககேப்டன் ஜெயசூர்யா, அரவிந்த டிசில்வா களமிறங்கினர்.
வழக்கமான அதிரடி ஆட்டம் ஆடிய ஜெயசூர்யா 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அட்டபட்டு, அரவிந்த டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்தார்.இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.
இறுதியில் 30.4 ஓவரில் 178 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. துவக்கத்தில் நிதானமாக விளையாடி அரவிந்த டிசில்வா ஆட்டத்தின்பிற்பகுதியில் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தார். அவர் 93 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய ஸ்கோரில் 3சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அட்டபட்டு 41 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
96 ரன்கள் குவித்த அரவிந்த டிசில்வா ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications