தமிழகத்தில் இன்று
கலர் டிவி. வழக்கு தீர்ப்பு: சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது- மூப்பனார்
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதன் மூலம சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று தமாகா தலைவர் மூப்பனார்கருத்து தெரிவித்தார்.
ஜெயலலிதா விடுதலை குறித்து மூப்பனாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது கூறியதாவது:
ஜெயலலிதா சம்பந்தமான வழக்குகளில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது சட்டம் தன்கடமையை செய்துள்ளது. மேலும் இதுபற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பாமகவினர் போராட்டம் நடத்துவது பற்றி அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். பொறுத்திருந்து பாருங்கள். புலிகளைஆதரிக்கும் கட்சிகளை எதிர்த்து அரசியல் ரீதியாக சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
தமிழக அரசியலில் நேரம் வரும்போது மாற்று அணி அமைப்போம். அதற்காக பல்வேறு கட்சிகள் ஒன்றுசேரும் என்றார்.
வழக்குப் போடுவதில் ஜாக்கிரதை உணர்வு தேவை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாவது:
நீதிமன்ற தீர்ப்புகள் சில நேரம் மிகப் பெரிய உண்மைகளை உணர்த்துகிறது. இதுபோன்ற பதவியில் இருந்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சேர்த்துவழக்கு போடுவதில் மிகுந்த எச்சரிக்கையும், ஜாக்கிரதை உணர்வும் தேவை.
தவறைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் இருக்க வேண்டுமே தவிர, பழிவாங்கும் நோக்கம், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் இருக்கக் கூடாதுஎன்பதை தீர்ப்பு தெரிவிக்கிறது.
தவறான முறையில் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை கருணாநிதி நிரூபிக்க வேண்டும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications