தமிழகத்தில் இன்று
கோவை டாக்டருக்கு அமெரிக்க விருது
கோவை:
கோவை டாக்டர் பழனிவேலு எழுதிய வீடியோ கட்டுரைக்கு 2000ம் ஆண்டுக்கான சாஜஸ் அமெரிக்க நூலக விருது கிடைத்துள்ளது. மருத்துவத் துறையில்இந்த விருது பெறும் முதல் இந்தியர் இவர்.
சர்வதேச அளவில் சிறந்த குடல் நோய்க்கான நவீன சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் 16 பேரில் டாக்டர் பழனிவேலு குறிப்பிடத்தக்கவர். இவர் கடந்தமாதம் அமெரிக்காவில் நடந்த அட்லாண்டா சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின்போது பழனிவேலுவுக்கு "2000 சாஜஸ் அமெரிக்க நூலக விருது வழங்கப்பட்டது. கணைய புற்று நோயால் ஏற்படும் மஞ்சள்காமாலையை குணப்படுத்துவது பற்றிய இவரது வீடியோ கட்டுரை சர்வதேச அளவில் இந்த விருதை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
இது தவிர கல்லீரல் கட்டிகள், உணவுக் குழாய், இரைப்பை, மலக்குடலில் உண்டாகும் புற்றுநோய் மற்றும் குடல் இறக்கம் போன்ற நோய்களுக்குநவீன சிகிச்சை முறை குறித்த இவரது 12-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 7-வது "சர்வதேச குடல்நோய் லேப்ராஸ்கோப் மற்றும் என்டோஸ்கோப்பி நவீன சிகிச்சைமாநாடுசிங்கப்பூரில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் டாக்டர் பழனிவேலு, "நவீன லேப்ராப்ஸ் கோப் சிகிச்சை முறையில் மண்ணீரலை அகற்றுதல் என்ற தலைப்பில் பேசுகிறார். இந்தமாநாடு ஜூன் 1ம் தேதி துவங்கி 4ம் தேதி முடிகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு நடந்த 6 வது சர்வதேச மாநாட்டில் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை, சிறப்பு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு விருதுவழங்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications