தமிழகத்தில் இன்று
டெல்லி:
1999 மார்ச் முதல் 2000 ஜனவரி ஜெர்மனிக்கு ரூ.1240 கோடி மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி இறக்குமதி செய்யும் ரெடிமேட் ஆடைகள் அளவில் இந்தியாவின் பங்கு 2 சதவீதம்தான் என்றாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இதுஅதிகமாகும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து அதிக அளவில் ரெடிமேட் ஆடைகளை இறக்குமதி செய்வதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் இந்திய ரெடிமேட் ஆடைகளுக்கு ஒரு சிறந்ததளமாக ஜெர்மனி விளங்குகிறது. இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜெர்மனி சந்தைக்குத் தேவைப்படும் அளவுக்கு ரெடிமேட் ஆடைகளை சப்ளை செய்ய இந்தியாவில் அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், தற்போதுமக்கள் அதிகம் விரும்பும் பருத்தி ஆடைகளை அதிகம் தயாரிக்கவும், பருத்தி நூல் கலந்த துணிகளை அதிகம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக,இந்திய-ஜெர்மனி ஏற்றுமதி வளர்ச்சித் திட்டத் தலைவர் கேப்ஷுல் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications