தமிழகத்தில் இன்று
இத்தாலியில், நண்பர் இதய நோயால் அவதிப்பட்டு வந்ததால், அவர் தற்கொலை செய்து கொள்ள உதவிய இளைஞருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனைகிடைக்கவுள்ளது.
இத்தாலியின் துஸ்கானி பகுதியிலுள்ள விரக்கியோ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவரின் பெயர் ஸ்டிபனோ டெல் கார்லோ. இவரது நண்பர்கைடோ. சிறிது காலமாக கார்லோ, இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்எனறு டாக்டர்கள் தெரிவித்திருந்தன். ஆனால் கார்லோவின் தந்தை, அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இன்னொருவரின் இதயத்தை தனது மகனுக்குப் பொருத்த அவர் விரும்பவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் கார்லோ இருந்தார். இந்த நிலையில்தனது நண்பர் கைடோவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதையடுத்து கார்லோவுக்கு இன்சுலின் மருந்தை, ஊசி மூலம் கைடோ செலுத்தியுள்ளார். அதுஅவரது உயிரைப் பறித்தது.
நண்பரைக் கொன்ற குற்றத்திற்காக கைடோவை போலீஸார் கைது செய்தனர்.அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு தண்டனை கைடோவுக்குக்கிடைக்கும். தெரிந்தே கொலை செய்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைடோவை தாங்கள் மன்னித்து விட்டதாக கார்லோவின் பெற்றோர் கூறியுள்ளனர். அன்பின் காரணமாகவே கைடோ இவ்வாறுசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கார்லோவின் தந்தை பியட்ரோ டெல் கார்லோ கூறுகையில், எனது மகன் மீது கைடோ மிகுந்த பாசம்வைத்திருந்தார். பள்ளி நாட்களிலிருந்தே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார்.
கைடோவின் தாயார் எலியானா கூறுகையில், எனக்கு கைடோவை திட்டத் தோன்றவில்லை. இருப்பினும் அவருக்குத் தண்டனை கிடைக்கவிருப்பதுஎனக்கு வருத்தமாக உள்ளது என்றார்.
தெரிந்தே கொலை செய்வது, கருணைக் கொலை செய்வது இத்தாலியில் கடும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 6 முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனைகிடைக்கும்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications