தமிழகத்தில் இன்று
டான்சி வழக்கு:வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி ஜெ. மனு
சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தன் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்கும் வரை அவ்வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கும்படி தனிநீதிமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு நிறுவனமான "டான்சிக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். அரசுப் பதவியில் இருந்தஜெயலலிதா, அரசு நிலத்தை வாங்கியது தவறு என்றும், அதன் மூலம் அரசுக்கு பத்திரப் பதிவில் இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்றும் ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்டவர்கள் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ், ஜனவரி 13ம் தேதி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதாவைவழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்று தீர்ப்பளித்தது. மீண்டும் இவ்வழக்கில் ஜெயலலிதாவை சேர்ந்து தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு விசாரணை துவங்கியது. இந்நிலையில் இவ்வழக்கில் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச்சட்டம் 420வது பிரிவின் கீழ் மோசடிக் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை மட்டும் நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி, தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் 420வது பிரிவிலான குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், தனி நீதிபதிஅன்பழகன் இதை ஏற்க மறுத்து விட்டார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை என்று நிராகரித்து விட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். திங்கள் கிழமை அவர் தாக்கல் செய்த மனுவில், ""உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்தனி நீதிபதி என் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்க மறுத்து விட்டார். அந்த குற்றச் சாட்டு நீக்கப்படும் வரை தனி நீதிமன்றத்தில் டான்சிவழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications