சபா கரீம் காயம்: டாக்கா செல்கிறார் மோங்கியா
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் நயான் மோங்கியா சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த விக்கெட் கீப்பர் சபா கரீமுக்குப் பதில்அவர் விளையாடுவார்.
பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சபா கரீமின் வலது கண்ணுக்குக் கீழே அடிபட்டது. உடனடியாக, டாக்காவில்உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எலும்பு முறிவு இல்லையென்றாலும், அவருக்கு ஒரு மாதம் ஓய்வு தேவை என்றுமருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக நயான் மோங்கியா சேர்க்கப்பட்டுள்ளார். புதன்கிழமை தொடர உள்ள பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டம் உள்படஇனி இந்தியா விளையாட உள்ள அனைத்து ஆட்டத்திலும் விக்கெட் கீப்பராக மோங்கியா விளையாடுவார்.
இதற்காக, புதன்கிழமை காலை அவர் டாக்கா புறப்பட்டுச் சென்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications