தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகார் சட்டப்பேரவை உறுப்பினராக ராப்ரி தேவி நாளை பதவியேற்க உள்ளார்.
பிகார் முதல்வராக உள்ள அவர், ராகோபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளரைத்தோற்கடித்தார். பிகார் முதல்வராக பதவி வகித்து வந்தாலும், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை.
சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாதவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்தில் மாநில சட்டப்பேரவைக்கு ஏதாவது ஒருதொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற விதி உள்ளது.
அதன் படி, பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் இரு தொகுதியில் வெற்றி பெற்ற பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராப்ரி தேவியின் கணவருமானலல்லு பிரசாத், ராகோபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து அத் தொகுதி உள்பட வேறு சில தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராப்ரி தேவிவெற்றி பெற்றார். அவர் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.
அவர் தவிர, சமீபத்திய இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சுஷில் குமார் சிங், மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர்அரூப் சட்டர்ஜி ஆகியோரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்க உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் மாநில ஆளுநர் சதானந்த் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications