தமிழகத்தில் இன்று
கோவை:
கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இந்த ஆண்டு ரூ. 1.94 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளன.மாவட்டத்தில் மேலும் 6 உழவர் சந்தைகள் துவங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
கோவையில் புதன்கிழமை மாவட்ட கலெக்டர் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் தான் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்குத் தமிழக அரசு,அதிகபட்சமாக ரூ. 1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கோவை மாநகராட்சிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிப் பகுதியில் இந்த நிதியைக் கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் முதல் கட்டமாக 94 லட்ச ரூபாயை அரசு உடனடியாக வழங்கவுள்ளது. இதில் 60 சதவீத நிதிசெலவிடப்பட்ட பின்னர் மீதமுள்ள தொகை கிடைக்கும்.
கிராமப்புறங்களில் தனிநபர் மற்றும் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கோவை நகரில் ரூ.30 லட்சம்செலவில் வணிக வளாகம் கட்டப்படும்.
கோவை நகரில் உழவர் சந்தை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 6 இடங்களில் உழவர் சந்தையைத்தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. இவை சிங்காநல்லூர், திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை ஆகிய இடங்களில்இவை அமைக்கப்படும்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 12 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு சுமார்ரூ. நாலரை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் நிரந்தரமாக குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த இடங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுக்கள் முடிவு செய்யும் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications