தமிழகத்தில் இன்று
பிஜியின் இடைக்காலப் பிரதமரை நியமிக்கும் முடிவை ராணுவ ஆட்சியாளர்கள் விலக்கிக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன் புரட்சியின் மூலம் பிரதமர் மகேந்திர சவுத்ரி, அமைச்சர்கள் உள்பட 30 பேரை சிறைப்பிடித்து வைத்துள்ள புரட்சிப் படையினர் எதிர்ப்பைஅடுத்து தனது முடிவை ராணுவ ஆட்சியாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, பிஜி ராணுவ கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிக் கும்பல் ஒன்று கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்படபலரைச் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
பிஜியில் இடைக்கால அரசு அமைப்பதற்கு முன் ராணுவ கவுன்சில் தனது எல்லா நடவடிக்கைகளையும் முடித்து விடவேண்டும் என்று கவுன்சில் தலைவர் பிராங்க்பெய்னிமாராமா விரும்புகிறார்.
ஆகவே, இடைக்காலப் பிரதமராக ராடு எபேலி நெய்லாடிகா அறிவிக்கப்பட்டதை புரட்சிப் படையினர் ஏற்காததை அடுத்து அந்த அறிவிப்பை ராணுவகவுன்சில் விலக்கிக் கொள்கிறது.
கவுன்சிலின் இப்போதைய ஒரே பணி, புரட்சிப் படையின் பிடியில் உள்ள பிரதமர் உள்பட அனைத்து பிணைக் கைதிகளையும் பத்திரமாக மீட்பதுதான். இதுதொடர்பாக, ஸ்பீட்டுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications