தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தீவிரவாதத்தை கட்டுப்ப-டுத்-த வெளி-ந-ா-டு-க-ளின் உ-த-வி-யை -கா-ரு-கி-ற-து இந்தி-யா

டெல்லி:

நாட்டில் நடக்கும் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி 12 நாட்கள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல்,பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் மாதம் 13 ம் தேதி செல்கிறார்.

இந்தியா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளில் நடக்கும் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அந்நாட்டினருடன்விவாதம் நடத்துவதற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மார்ச் 1999 ல் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில், அத்வானி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபின் அத்வானி வெளிநாடுகளுக்குச் செல்வதுஇதுவே முதல்முறையாகும்.

இஸ்ரேல் நாட்டினர் அத்வானியின் வருகையை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.

அந்த அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இஸ்ரேலுக்கு வருவது குறித்து நாங்கள்மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இவரது இஸ்ரேல் வருகையினால் இஸ்ரேல் - இந்தியா ஆகிய இருநாடுகளின் உறவு இன்னும் வலுப்பெறும்என்கின்றது.

அத்வானி தனது 12 நாட்கள் சுற்றுப்பயணத்தில் இஸ்ரேல் தவிர பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் செல்வார்.

அவர் தனது சுற்றுப்பயணத்தை ஜூன் 13 ம் தேதி தொடங்குகிறார். அத்வானியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்குறித்து விவாதிக்கும் வகையில் இருக்கும்.

இஸ்ரேல் செல்லும் அவர் இஸ்ரேல் அதிபர் எசார் விஸ்மேன், பிரதமர் எஹூட் பராக் ஆகியவர்களை சந்திப்பார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கடந்த ஜனவரியில் இஸ்ரேல் போவதாக இருந்தது. ஆனால்இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி அங்கு இல்லாததால் அந்த சுற்றுப்பயணம்ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அவரும் அத்வானியுடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்வானி தனது பிரிட்டன் பயணத்தின்போது ஸ்காட்லான்ட் யார்டு என்ற பகுதிக்குச் சென்று அங்குள்ளபோலீசாருடன் விவாதம் நடத்துவார். அங்கு நடக்கும் தீவிரவாதிகள் குறித்தும், அதைத் தடுத்து நிறுத்தும்நடவடிக்கைகள் குறித்தும் விவாதம் நடத்துவார்.

கார்கிலில் நடந்த பிரச்சனையை அடுத்து, நாட்டின் தீவிரவாதத்தைக் குறைக்கும் வகையில் விவாதம்நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+