தமிழகத்தில் இன்று
தலித் படுகொலைகள் குறித்து சிஐடி விசாரணை கோரும் விடுதலை சிறுத்தைகள்
சென்னை:
கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 19 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைகள் குறித்து ஒட்டுமொத்தசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு அதிமு க, தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) உள்ளிட்ட பல கட்சிகள்ஆதரவு தெவித்துள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் வியாழக் கிழமை அவர் அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மூன்று தலித்துகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது முதல் சம்பவம்அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்று 19 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே ஒட்டுமொத்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்காக கடலூர்மாவட்ட அளவில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறோம். அதற்கு தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆதரவு கேட்டு மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன். திட்டமிட்டபடி முழு அடைப்புப் போராட்டம்நடைபெறும்.
படுகொலை செய்தவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, முழு அடைப்புக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களைபோலீசார் கைது செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற படுகொலைக்கு சாதி வெறியும், கள்ளச்சாராயம் தான் முக்கிய காரணங்கள். இதற்கு திமுகவும், பாமகவும் துணை போகின்றன.தமிழகத்தில் திமுக அரசு தலித் விரோத அரசாக செயல்படுகிறது.
இலங்கை பிரச்னையில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடக் கூடாது. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா முட்டுக்கட்டையாகஇருக்கக் கூடாது என்றார் திருமாவளவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications