கபில், அசார், ஜடேஜா, பிரபாகர் சொத்துக்கள் மீது "கண் வைக்கிறது" வருமான வரித் துறை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர்கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா, ஊழல் குற்றச்சாட்டகளைக் கூறிய பிரபாகர் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள்குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்டக்காரர்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக இந்தியமுன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக அதிக அளவில் குற்றச்சாட்டுகள்கூறப்படுகின்றன. இது தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்திய வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்முதன் முதலில் கூறினார். தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்தஅவர், சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று வாக்குமூலம் அளித்ததுடன், சில முக்கியஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
சூதாட்டக்காரர்களிடமிருந்து பெற்ற லஞ்சப் பணத்தில் நிறைய சொத்துக்களை கிரிக்கெட் வீரர்கள் வாங்கிக்குவித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஊழல் புகார்கள் கூறப்பட்ட கபில்தேவ், அசார், ஜடேஜா,பிரபாகர் ஆகியோரது சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
லஞ்சப் பணத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.அப்படி தகவல் கிடைத்தால் உடனே சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரிடம் தீவிரவிசாரணை நடத்துவோம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, சில கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள சொத்துக்கள் குறித்த பட்டியலை சிபிஐ தயாரித்து வைத்துள்ளது.தகவல் கிடைத்தவுடன் அந்த சொத்துக்கள் பற்றி கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும். கிரிக்கெட்வீரர்கள் லஞ்சம் வாங்கினார்களா என்பது குறித்து முழு விசாரணையில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, சொத்துக்கள்குறித்து உறுதியான தகவல் கிடைத்தவுடன் அவை பற்றி விசாரிப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications