தமிழகத்தில் இன்று
பிஜியில் ஸ்பைட்-- ராணுவத் தளபதி பேச்சுவார்த்தை
சுவா:
பிஜியில் தலைநகர் சுவாவில் புரட்சியாளர் ஜார்ஜ் ஸ்பைட் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ராணுவத் தளபதிபிராங்க் பெய்னாமாராமை சந்திக்கவுள்ளார்.
பிஜியில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஸ்பைட் ராணுவத்துடன்பேசுவது இதுவே முதன்முறையாகும்.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிக் கும்பல் ஒன்று கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் புகுந்துபிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பலரைச் சிறைப்பிடித்து வைத்துள்ளது. இதையடுத்து ராணுவம் பிஜியைத் தனதுகைக்குள் கொண்டு வந்தது.
பிஜியில் இடைக்கால அரசு அமைப்பதற்கு முன் ராணுவ கவுன்சில் தனது எல்லா நடவடிக்கைகளையும் முடித்துவிடவேண்டும் என்று கவுன்சில் தலைவர் பிராங்க் பெய்னிமாராமா விரும்பினார்.
ஆகவே, இடைக்காலப் பிரதமராக ராடு எபேலி நெய்லாடிகா அறிவிக்கப்பட்டதை புரட்சிப் படையினர் ஏற்காததைஅடுத்து அந்த அறிவிப்பை ராணுவ கவுன்சில் விலக்கிக் கொண்டது.
இந்நிலையில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் ராணுவத் தளபதி பிராங்க் பெய்னாமாராமை சந்திக்கமுடிவுசெய்துள்ளார்.
ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஹோவர்டு போலிடிமி நிருபர்களிடம் இத்தகவல்களைக் கூறினார். பிஜியில் கடந்ததிங்கள்கிழமை நாங்கள் ஆட்சியைப் பிடித்துள்ளோம்.
முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை பிஜியில் ராணுவத்தினரும், புரட்சிக்காரர்களும் நாடாளுமன்றத்தில்அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்றார்.
முன்னதாக பிஜி பாராளுமன்றத்தின் முன் கூடியிருந்த மக்களை விரட்ட முயன்ற போலீஸ்காரர் ஒருவரைஅங்குள்ள கும்பல் ஒன்று தாக்கியது. இதையடுத்து அங்குள்ள கூட்டத்தில் பெரும்பாலானவர்களைப் போலீசார்கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சின்ன கலவரத்தைத்தவிர பிஜியில் அமைதி நிலவி வருகிறது. காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் இந்திய விற்பனையாளர்கள் யாரும்வரவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications