தமிழகத்தில் இன்று
காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க எங்கு வேண்டுமானாலும் வருவாராம் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேச்சவார்த்தை நடத்த எங்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சி.என்.என். தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும்.இதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் வர நான் தயாராக இருக்கிறேன்.
இப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இங்கு அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் எந்தப் பேச்சுவார்த்தையானாலும் அது காஷ்மீரை மையமாகக் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள், பிற முயற்சிகள் தோற்று விட்டன. எனவேஐ.நா சபை அல்லது மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தம் அவசியமாகியுள்ளது. இருப்பினும் இந்தியா விரும்பினால், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான்தயாராகவே உள்ளது.
இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் குறைய வேண்டும். இது கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். பிரச்சினைகள் குறித்து முதலில் இருவரும் பேசவேண்டும். அதற்குப் பிறகு அவற்றைத் தீர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
கார்கில் போன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் எழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஆயுதப் போட்டியில் இறங்கவில்லை. இருப்பினும் எங்களது நாட்டின் பாதுகாப்பு குறித்த நாங்கள்சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications