தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பெங்களூரிலிருந்து புட்-டபர்த்-திக்கு -புதிய ரயில்
மைசூர்:

அடுத்த 5 மாதங்களில் பெங்களூரிலிருந்து பிற ஊர்களுக்கு ஐந்து புதிய ரயில்கள் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர்கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென்னக ரயில்வே பெங்களூரிலிருந்து புதிதாக ஐந்து ரயில்களை விட முடிவுசெய்துள்ளது. பெங்களூர்-புட்டபர்த்தி, பெங்களூர்-ஷிமோ ஆகிய இடங்களுக்கிடையேரயில்கள் வரும் செப்டம்பரில் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரிலிருந்து பிரூர் வரை சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஷிமோகா வரை நீடிக்கப்படவுள்ளது. பெங்களூர்- மைசூருக்கிடையே பயணிகள்வசதிக்கேற்ப ரயில்போக்குவரத்தைச் செம்மைப்படுத்த கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆகும் செலவில் கர்நாடக அரசு உதவி செய்யும்.

பெங்களூர்- சத்யமங்கலத்திற்கிடையே ரயில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்புதல்பெறவுள்ளோம். அடுத்த மூன்று மாதங்களில் இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகும். திட்டக்கமிஷன் இதற்கான ஒப்புதலை ஏற்கனவேஅளித்துவிட்டது.

அது தவிர பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையம் வரை ரயில் போக்குவரத்தை நீடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு திட்டக்கமிஷனிடம்ஒப்புதல் பெற முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+