பிரெஞ்சு ஓபன்: அகாஸி தோல்வி - 10 ஆயிரம் டாலர் அபராதம்
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அமெரிக்காவின்ஆந்த்ரே அகாஸி தோல்வியடைந்தார்.
ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த கரோல் குசேராவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 2-6, 7-5, 6-1, 6-0என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஏற்கெனவே, உலகின் முதல் நிலை வீரரான அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தோல்வியடைந்த அகாஸி, ஆட்டத்துக்குப் பிறகு கட்டாயம் கலந்து கொள்ளவேண்டிய பத்திரிகையாளர் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காகஅவருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் (10 ஆயிரம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது.
தோல்வியடைந்த அகாஸியை, பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைத்தோம். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார் என்று போட்டி அமைப்பாளர்கள்கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய வீரர் மாரட் சபினுடன் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தபோது கூட, அதற்குப் பிறகுநடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தை அகாஸி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காயம் காரணமாக அகாஸி மிகவும் சோர்ந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவர் பத்திரிகையாளர் கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும்கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications