தமிழகத்தில் இன்று
பேட்டரியில் இயங்கும் கார்கள் தயாரிக்க மாருதி, டெல்கோ நிறுவனங்கள் திட்டம்
டெல்லி:
பேட்டரியில் இயங்கும் கார்கள் தயாரிப்பது குறித்து இந்தியாவின் மாருதி உத்யோக் நிறுவனம், டாடாஇன்ஜினியரிங் (டெல்கோ) ஆகிய நிறுவனங்களுடன் ஆஸ்திரேலியாவின் முன்னணி கார் பேட்டரிதயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
பார்னவ் டெக்னாலஜீஸ் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கார் பேட்டரிகள் தயாரிப்பதில் அந்நாட்டில் முன்னணியில் உள்ளது. இந் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதிமற்றும் டெல்கோ நிறுவனங்களுடன் இணைந்து பேட்டரி கார்கள் தயாரிப்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
அடுத்த ஒரு வாரம் வரை பேச்சு நடத்தப்படும். பேச்சின் முடிவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.மாருதி, டெல்கோ இரண்டில் எந்த நிறுவனம் முன் வந்தாலும் அதனுடன் சேர்ந்து பேட்டரி கார்கள் தயாரிப்பதுகுறித்து அடுத்த கட்ட பேச்சு நடத்துவோம் என்று பார்னவ் டெக்னாலஜீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்டீவ்ஹால்டோம் தெரிவித்தார்.
இந்திய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ள பேட்டரி கார், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும்ஏற்படுத்தாது. ஏனெனில் அதில் இருந்து புகையே வராது. மேலும், காரில் பொறுத்தப்படும் பேட்டரியை ஒரு முறைசார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் பயணம் செய்யலாம். காரில் பேட்டரியைப் பொறுத்த ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் செலவாகும். மேற்கொண்டு செலவு ஏதும் இல்லை என்றார் அவர்.
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுக்குப் பதிலாக பேட்டரியில் இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டால், இந்தியாமுழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்குப் பதிலாக பேட்டரி சர்வீஸ் நிலையங்களைத் திறக்க எங்கள்நிறுவனம் உதவி செய்யும். மேலும், பெட்ரோல் நிலையங்களிலேயே பேட்டரி சர்வீஸ் செய்யும் வசதியையும்நாங்கள் ஏற்படுத்துவோம் என்றார் ஸ்டீவ்.
எங்கள் நிறுவனம் தற்போது சீனாவில் உள்ள இரு சக்கர வாகனங்களுக்குப் பேட்டரிகள் பொறுத்தும் பணியில்ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்குப் பேட்டரி பொறுத்தும் முடிவு இல்லை.இந்தியாவைப் பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக கார்கள் மற்றும் மூன்று சக்கரவாகனங்களுக்குப் பேட்டரிகள் பொறுத்தவே தற்போது முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications