கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கைக் குறி பார்க்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கு பற்றிய விசாரணையை மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மேற்கொண்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில்தேவ், அசாருதீன், மோங்கியா, ஜடேஜா, அஜய் சர்மா, பிரபாகர் உள்ளிட்டோர் மீது புகார்கள்எழுந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சூதாட்டக்காரர்களிடமிருந்து வாங்கிய கோடிக்கணக்கான அளவுக்கு கிரிக்கெட் வீரர்கள் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளதாக வந்த தகவல்களைஅடுத்து, வீரர்களின் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கு பற்றி சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும்நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடைய வங்கிக் கணக்கு பற்றியும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
இந்த விசாரணையின் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த பணம் பற்றி முழு தகவல்களையும் பெற முடியும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, வருமான வரித்துறையினரின் உதவியைக் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும், ஹவாலா மோசடியில் கிரிக்கெட் வீரர்கள்ஈடுபட்டுள்ளனரா என்பதைப் பற்றி விசாரிக்க மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் உதவியைக் கோரவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications