தமிழகத்தில் இன்று
எஞ்சிய வாழ்நாளும் ஆக்கபூர்வமானதாகவே அமையும்: கருணாநிதி
சென்னை:
என் எஞ்சிய வாழ்நாள் பணியும் ஆக்கப்பூர்வமானவையாகவே அமையும் என்று 77 வயதில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி தனதுவாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் 77 வயது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டையில் வெள்ளிக் கிழமைசெய்தியாளர்கள் அனைவரும் தமிழக முதல்வரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் தனது பிறந்தநாள்செய்தியை முதல்வர் வெளியிட்டார்.
முதல்வரின் பிறந்தநாள் செய்தி வருமாறு:
என் 77-வயது பிறந்தநாளையொட்டி வாழ்த்து வழங்கிடும் பெருமக்கள், தொண்டர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக்காணிக்கையாக்குகிறேன். வலிமை மிக்க நாடாக இந்தியாவையும், வளம் கொழிக்கும் மாநிலமாக தமிழ்நாட்டையும் நிலை பெறச் செய்திட என் தொண்டுதொடரும்.
சமுதாயத்தின் சீர்குலைவுக்கும், முன்னேற்றத் தடைக்கும் காரணமாக உள்ள சாதி, மத வேறுபாட்டுக் காழ்ப்புணவுர்களை வேரோடு களைந்தெரிந்து விட்டுசமத்துவம், சமதர்மம் ஓங்கி உயர்ந்திடவும், மூட நம்பிக்கைகள் அறவே நீங்கிய பகுத்தறிவு ஒளி சமுதாயத்தில் பரவிடவும், பல்வேறு மொழிகள்பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் திருநாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை விட வேண்டும்.
அனைவரும் இந்த நாட்டு மக்களே எனும் ஒருமைப்பாட்டு உணர்வு உறுதிப்படவும், எந்தப் பிரச்சனைகளாயினும், அரசியல் மாறுபாடுகளாயினும்,ஜனநாயக அடிப்படையில் தோழமை உணர்வுடன் தீர்க்கப்பட்டவும், துளி வன்முறைக்கும் இடம் தராத மனித நேயம் வளர்க்கப்படவும் இளமைப்பருவத்திலிருந்தே பெரியாரின் கரம் பிடித்தும், அண்ணாவின் நிழல் தொடர்ந்தும் நான் ஆற்றி வரும் பணிகள் எஞ்சியுள்ள என் வாழ்நாளிலும்ஆக்கபூர்வமானவைகளாக அமையும் என்பதை இந்தப் பிறந்த நாள் செய்தியாக வழங்குகிறேன்.
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கருணாநிதி உறுதி கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications