தோல்வியைத் தழுவியது இந்தியா: சதத்தை நழுவவிட்டார் டெண்டுல்கர்
டாக்கா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியுற்றது.
டாக்காவில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. கேப்டன்ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தினால், அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது.
ஜெயசூர்யா 105 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக அட்டபட்டு 42 ரன்களும், அரவிந்த டிசில்வா 23 ரன்களும், கலுவிதரனா 33ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அகர்கர், டெண்டுல்கர் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. டெண்டுல்கரும், கங்குலியும் துவக்கஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். டெண்டுல்கர் மட்டும் ஓரளவு நின்று ஆடி 95 பந்துகளில் 93ரன்கள் எடுத்து அவுட்டானார். திராவிட் 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இலங்கை அணியில் வீரரத்னே சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், ஸோய்சா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதமடித்த இலங்கை கேப்டன்ஜெயசூர்யா ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா அடுத்து பாகிஸ்தானை எதிர்த்து சனிக்கிழமை விளையாடுகிறது. அப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு நுழையமுடியும்.வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஆட்டம் நடைபெறுகிறது.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications