தமிழகத்தில் இன்று
குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடம்
சென்னை:
குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகமும், கேரளமும் முதலிடத்தில் உள்ளன என்று மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை இணைஅமைச்சர் ரீட்டா வர்மா தெரிவித்தார்.
சென்னை வந்த அவர் தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்கள்ை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
குடும்ப நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகமும், கேரளமும் முன்னணியில் உள்ளன. வட இந்திய மாநிலங்கள் இவ்விஷயத்தில் கெட்டபெயர் சம்பாதித்துள்ளன.
எய்ட்ஸ், மலேரியா ஆகிய நோய்களுக்கான நான்கு முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. குடும்ப நலத்தை பேணுவதில் நம்மிடம் சிறப்பானதிட்டங்கள் உள்ளன. ஆனால் அதை உரிய வகையில் கண்காணிக்கத் தவறி விட்டோம். இதுதான் பிரச்சினை.
தமிழக மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் எனக்கில்லை. மத்திய அரசை பொறுத்தவரையில் மருந்துகள் வாங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை இல்லை. பான்பராக், குட்கா போன்ற பாக்கு வகைகளை தடை செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனை. பரிசீலிக்கப்படும்.
நமது நாட்டில் வளரும் அரிய மூலிகைச் செடிகளுக்கான காப்புரிமையை வெளிநாட்டினர் வாங்கி விட்டது உண்மைதான். அதில் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன்இருக்க வேண்டுமோ, அப்படியிருக்கத் தவறி விட்டோம். அதனால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.
பெண் சிசுக் கொலை என்பதை குற்றமாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஒரு சமூகக் குற்றம். பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகமாற வேண்டும். அதன் மூலம் இதைத் தடுக்க முடியும். இதற்கு சமூக இயக்கம் அவசியம் என்றார் ரீட்டா வர்மா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications