தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகனையைக் கூட்டாகத் தயாரிக்க கிளிண்டனுக்கு புதின் யோசனை

வாஷிங்டன்:

ரஷியாவும், அமெரிக்காவும் சேர்ந்து அணு ஆயுத ஏவுகனைகளைச் சமாளிக்கும் வகையில் புதிய ரகஏவுகனையைத் தயாரிக்கலாம் என்று ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் யோசனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷியாவுக்கு எதிரான நாடுகள் அணு ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதிலிருந்துதங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த ஏவுகனை பயன்படும் என்றும் புதின் கூறியுள்ளார்.

என்.பி.சி. டி.வி. நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்மாஸ்கோ வருகிறார். அப்போது எனது யோசனையை அவரிடம் தெரிவிப்பேன்.

இதுபோன்ற முயற்சிகள் சாத்தியமானதே. அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள அவர்களது நட்புநாடுகளுக்கு, பல தீவிரவாத நாடுகள் எப்போதுமே மிரட்டலாகவே உள்ளன. இதுபோன்ற ஏவுகனை பாதுகாப்புவளையத்தை அமைத்துக் கொண்டால், அவர்களது மிரட்டல்களை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்றார் புதின்.

தற்போது ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன், புதன்கிழமை கூறுகையில், ஏவுகனைதொழில்நுட்பத்தை பிறநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.இருப்பினும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இது சாத்தியமில்லாதது.ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகள் அமெரிக்காவின் கருத்துக்கு உடன்படாது என்று கூறியிருந்தனர்.

ரஷியாவும், சீனாவும் அமெரிக்காவின் கடும் விமர்சகர்கள். எனவே அமெரிக்கத் தொழில்நுட்பத்தைபகிர்ந்துகொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மாறாக, அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குஎதிராக தங்களது அணு ஆயுத பலத்தை அதிகரிக்கவே முயல்வார்கள் என்றும் அவர்கள் கருத்துதெரிவித்திருந்தனர்.

தற்போது ரஷிய அதிபரின் யோசனை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜேலோக்கர்ட் கருத்து தெரிவிக்கையில், இதுபற்றி இப்போதே எதுவும் கூற முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+