தமிழகத்தில் இன்று
சியர்ரா லியோன் தீவிரவாதிகளிடமிருந்து முக்கிய பகுதியை மீட்டது இந்திய ராணுவம்
பிரீடவுன்:
சியர்ரா லியோன் தலைநகர் பிரீடவுனில், ஒரு மாதத்திற்கு முன்பு தீவிரவாதிகள் பிடித்த ரோக்பெரி ஜங்ஷன் என்ற பகுதியை அங்கு அமைதி காக்கும் பணியில்ஈடுபட்டுள்ள இந்தியப் படையினர் தீவிரவாதிகளை விரட்டி விட்டு மீட்டனர்.
வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், இந்தியப் படையினர் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.கடும் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தப் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு தீவிராதிகள் தாக்குதல் நடத்தியபோது நான்கு ஜாம்பிய நாட்டைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர்கொல்லப்பட்டனர். அதன் பிறகு தீவிரவாதிகள் வசம் இப்பகுதி வந்தது. தலைநகர் பிரீடவுனிலிருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது.
ரோக்பெரி ஜங்ஷன் அமைதி காக்கும் படை வசம் வந்தது குறித்து சியர்ரா லியோனில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் குழுவின் செய்தித் தொடர்பாளர்டேவிட் விம்ஹர்ஸ்ட் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் பிடித்துள்ளோம். இப்பகுதி அமைதி காக்கும் படை வசம்வந்துள்ளதன் மூலம் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது என்றார்.
ரோக்பெரி ஜங்ஷன் பாதுகாப்புப் படை வசம் வந்துள்ளது, தலைநகர் பிரீடவுனில் பெரும் நிம்மதி அலையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி காக்கும் பணிக்குவந்துள்ள இங்கிலாந்துப் படையினர் விரைவில் சியர்ரா லியோனிலிருந்து கிளம்பவுள்ளதால், முக்கியப் பகுதி அமைதி காக்கும் படையிடம் வந்திருப்பதுதலைநகர் மக்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
தற்போது ரோக்பெரி ஜங்ஷனிலிருந்து, தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முக்கிய மற்றொரு முக்கிய இடமான லன்சார் 18 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது.சியர்ரா லியோனின் முக்கிய வைரச் சுரங்கம் இங்கு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications