தமிழகத்தில் இன்று
ஊட்டியில் சீசன் முடிந்து மழைச் சாரல் துவக்கம்
கோவை:
ஊட்டியில் சீசன் முடிந்து மழைச் சாரல் பெய்யத் துவங்கியுள்ளது.
வழக்கமாக களைகட்டியிருக்கும் ஊட்டி சீசன், இந்த ஆண்டு கடும்போராட்டத்திற்கிடையே நிறைவுற்றது. ஊட்டி சீசன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்துவங்கி ஜூன் மாதம் முதல் தேதியில் நிறைவடையும்.
இந்த கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து கடும் நெரிசல்ஏற்படும். மலர்க் கண்காட்சி, கோடை விழா என கோலகலமாக இருக்கும் இந்த விழாஇந்த ஆண்டு சோகத்தில் நிறைவடைந்தது.
தேயிலை விவசாயிகளின் பஸ் எரிப்பு சம்பவத்தால், சுற்றுலாப் பயணிகள் ஊட்டிசெல்ல பெரும் அச்சம் அடைந்தனர். மேலும் மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதால்பயணிகளின் வருகை மிகவும் குறைந்து போனது. ஆனால், மலர்க் கண்காட்சிக்குதயாரான தாவரவியல் பூங்கா அழகாக பூத்துக் குலுங்கியது.
தற்போது சீசன் முடிந்து மழைக் காலம் துவங்கியுள்ளது. தென்மேற்குப் பருவமழையின் சாரல் நீலகிரியில் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் குளுகுளு ஊட்டிகுளிர்காலத்தின் ஆரம்பத்திற்குச் சென்றுள்ளது.
அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் துவங்கும்.
இது இரண்டாவது சீசனாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவேஇருக்கும். விழா நிகழ்ச்சி எதுவும் இருக்காது. மேலும் பள்ளிகள் மற்றும்அலுவலகங்களுக்கு விடுறை எதுவும் இல்லாமல் இருப்பதாலும் பயணிகளின் வருகைகுறைவாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications
