தமிழகத்தில் இன்று
"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்
சேலம்:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் ஈழம் ஒன்றுதான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். இதுவே வைகோ மற்றும் எனது கருத்தும். ஒரு தமிழன்என்ற முறையில் இதைச் சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை. இது எங்கள் உரிமை.
அனைத்து நாடுகளிலும், அங்கு வசிக்கும் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. எனவே அங்கு பிரச்சினை இல்லை. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை.சிறுபான்மையினரான தமிழர்கள் அங்கு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல பகிரங்கமாக ஈழப் போருக்கு ஆதரவுதெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தது ஒரு பேரணியாவது நடத்தலாம்.அப்போதுதான் அவர்கள் கட்சியின் பெயரிலுள்ள தமிழ் என்பதற்குஅர்த்தம் இருக்கும்.
கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மானின் தொடர் போராட்டத்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்தநெருக்குதல்களாலும்தான் வங்கதேசத்திற்கு விடுதலை கிடைத்து தனி நாடானது. இதை காங்கிரஸ் கட்சி மனதில் கொள்ள வேண்டும்.
மதிமுக நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பேரணியைத் தடை செய்வது குறித்து முதல்வர் கருணாநிதிதான் கருத்து சொல்ல வேண்டும். பேரணியைத் தடை செய்தால்,அது தமிழர்களின் உணர்வுகளைத் தடை செய்வது போலாகும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications