தமிழகத்தில் இன்று
கோ-லா-க-ல-மா-க தொட-ரும் காங்-கி-ரஸ் கோஷ்--டிப்- பூசல்
சென்னை:
ஒற்றுமைக் காட்சி முடிந்து ஒரு வாரத்திற்குள் தமிழக காங்கிரஸ் கட்சியில் மீண்டும்கோஷ்டிப் பூசல் எதிரொலிக்கத் துவங்கி விட்டது.
தலைமை பதவியில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தியை மாற்ற வேண்டும் என்றுமுன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்கள் சென்னையில் தனிக் கூட்டம் போட்டுதீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழகத்தில் தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள்கோஷ்டிப் பூசலை மறந்து மே 24ம் தேதி ஒன்று கூடினர். இனிமேல் எல்லோரும்சேர்ந்தே இருப்போம் என்றும் அறிவித்தனர்.
திருமணத்திற்கு முன்பு நடைபெறுகிற நிச்சயதார்த்தம் போல் இதை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
ஆனால், திருமணம் நடப்பதற்குள்ளாகவே, அதாவது நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரத்திற்குள்ளாகவே காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களின் ஒற்றுமை காணாமல் போய்விட்டது.
கடந்த மாதம் 24ம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை, தேனியில் இம்மாதம் 2ம்தேதி நடந்த கூட்டுப் போராட்டத்துடன் முடிவுக்கு வந்தது. சென்னையில் நேற்று மாலைதங்கபாலு ஆதரவாளர்கள் ரகசியக் கூட்டம் நடத்தி, திண்டிவனம் ராமமூர்த்திக்குஎதிராக கடுமையாக குரல் கொடுத்தனர்.
இனிமேலும் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது; அவருக்கு பதிலாக கட்சியினரின்ஆதரவு பெற்ற ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில்பேசப்பட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன்சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கபாலுஆதரவாளர்கள் கூட்டம் சனிக் கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில்தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர்களான மா-நி--ல நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள்,முன்னாள் எம்எல்ஏக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.யாரை புதியவராக நியமிக்க வேண்டும் என்பதை டெல்லியில் உட்கார்ந்து கொண்டுதீர்மானிக்கக் கூடாது.
தமிழகத்திற்கு வந்து கட்சியினர் கருத்தை அறிந்து பின்னரே தலைவர் யார் என்பதைகட்சித் தலைமை தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் எந்த தலைவரை நயமித்தாலும்அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இக்கூட்டத்தில் பேசியவர்கள்தெரிவித்தனர்.
இப்போது தான் எல்லோரும் ஒன்றாக கூடினீர்கள். அதற்குள் விலகி தனிக் கூட்டம்நடத்துகிறீர்களே என்று தங்கபாலு ஆதரவாளர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு அவர்கள், ""நாங்கள் ஒற்றுமையாக செயல்படத் தயாராக இருக்கிறோம். அதேநிேரத்தில் திண்டிவனம் ராமமூர்த்தியை தலைமை பதவியில் இருந்து நீக்க வேண்டும்என்ற நிலையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications