தோல்விக்குப் பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் கங்குலி

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்குபந்துவீச்சாளர்களே காரணம் என்று அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியை மட்டும் வென்று பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம்தோற்றதன் மூலம் ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்தியா விலகிவிட்டது.இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானும், இலங்கையும் தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தாலும், போதுமான திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லை. ஸ்ரீநாத், பிரசாத் போன்ற அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் குமரன், அமித் பண்டாரி போன்ற மித வேகப் பந்துவீச்சாளர்களை இந்தியா நம்பியது. மேலும் டெண்டுல்கர், அகார்கர், கும்ளே, ராபின்சிங் போன்றவர்களும் பந்து வீசினர். ஆனால், எதிர் அணி ஆட்டக்காரர்களைவிரைவில் அவுட்டாக்க முடியாமல் அவர்கள் திணறினர்.

பந்து வீச்சாளர்கள் மட்டும் திணறாமல், அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்கமிகவும் திணறினர். டெண்டுல்கர், கங்குலி, ஜடேஜா ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்குவித்தனர். முதல் இரு ஆட்டங்களில் கூடுதலாக விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்துகவனித்தாலும், பேட்டிங்கில் 20 ரன்களுக்கும் அதிகமாகவே திராவிட் ரன் குவித்தார்.ஆனால், மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை.

இந் நிலையில், பந்து வீச்சாளர்கள் திறமையாகப் பந்து வீசாததால்தான் இந்திய அணிதோற்க நேர்ந்தது என்று கேப்டன் கங்குலி கூறியுள்ளார். அனில் கும்ளே தவிர மற்றவீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவுக்குச் சரியாக பந்து வீசவில்லை.

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான ஆட்டங்களில் டாஸ் தோற்றதும் ஒருகாரணம். எதிர் அணியின் பெரிய ஸ்கோரை அதுவும் சிறந்த பந்து வீச்சாளர்களைக்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு எதிராக எட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம்.முதலில் நாம் டாஸ் வென்றிருந்தால், முதலில் பேட் செய்திருப்போம் என்றார் கங்குலி.

டாக்காவிலிருந்து இந்திய அணி திங்கள்கிழமை நாடு திரும்புகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+