தமிழகத்தில் இன்று
முதல்வர் கருணாநிதிக்கு 77-வது பிறந்தநாள் - ராமதாஸ் நேரில் வாழ்த்து
சென்னை:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி தனது 77-வது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். அவருக்குப் பல கட்சித்தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். வேறு கூட்டணியில் இருந்தாலும் நண்பர் என்ற முறையில் கருணாநிதிவீட்டுக்கு வந்த தமாகா தலைவர் மூப்பனார் வாழ்த்துத் தெரிவித்துச் சென்றார்.
அவரைத் தவிர மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துத்தெரிவித்தனர். ஆனால், கருணாநிதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும்பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் வரவில்லை. சேலத்திலிருந்து தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை காலை பத்திரிகைகளில் பலவாறாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து,சேலத்திலிருந்து அவரசமாக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்த ராமதாஸ்,நேரே கோபாலபுரத்தில் உள்ளகருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்துத்த தெரிவித்தார்.பின்னர் இருவரும் சுமார் 30 நிமிடம் பேசினர்.
சேலம், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால், சனிக்கிழமை நேரில் வரமுடியவில்லை.மற்றபடி வேறு காரணம் ஏதும் இல்லை என்று நிருபர்களிடம் தெரிவித்தார் ராமதாஸ்.
சமீபத்தில் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், ராமதாஸுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இப் பிரச்சினைக்குமுடிவு கட்ட முதல்வர் சமரசக் கூட்டம் நடத்தினார். அதற்குப் பிறகு, திமுகவுக்கு எதிராக பல கண்டனஅறிக்கைகளை வெளியிட்ட ராமதாஸ், இப்போதுதான் முதன் முறையாக கருணாநிதியைச் சந்தித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications