தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் முற்றுப் புள்ளி வைக்கும் - ராமதாஸ்

சென்னை:

இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் முற்றுப் புள்ளி வைக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்எஸ். ராமதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக, சென்னையில் நிருபர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இலங்கைப் பிரச்சினை பற்றி தனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளகருத்தை நான் வரவேற்கிறேன். ஈழத் தமிழர்களை சிங்களர்கள் ஏற்க மறுக்கின்றனர். விரும்பாத மனைவியுடன்எத்தனை நாள் வாழ்வது. எனவே விவாகரத்து கொடுங்கள் என்று தமிழர்கள் கேட்கின்றனர் என்று முதல்வர்கூறியுள்ளார். இது சரியான சிந்தனை.

இலங்கையின் இறையாண்மை காக்கப்படவேண்டும் என்று பேசுவது சரியல்ல. தமிழ் ஈழம் ஏற்படுத்தினால்இறையாண்மை பாதிக்கும் என்பது அர்த்தமற்றது. இலங்கையில் இறையாண்மை எங்கே இருக்கிறது. நாட்டின் உயர்பதவியில் ஒருவராவது தமிழர் உண்டா. பிறகு என்ன இறையாண்மை.

எனவே, இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் அமைவதே முற்றுப் புள்ளி வைக்கும்.

கடலூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வன்முறையைத் தூண்டுகின்றனர். சமீபத்தில் மூன்றுதலித்துக்கள் கொலை செய்யப்பட்டதற்குச் சாதி விரோதம் காரணம் அல்ல. அதே இனத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ஏற்பட்ட தகராறுதான் காரணம்.

காதல் பிரச்சினை காரணமாக நடந்துள்ள இக் கொலைகளை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக அரசியல் ஆக்குகிறார்திருமாவளவன். அதனால், அம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. இனிமேலாவது எப்படி அரசியல்நடத்தவேண்டும் என்று அவரை ஆதரிக்கும் த.மா.கா. போன்ற கட்சிகள் அவருக்குக் கற்றுத் தரவேண்டும் என்றார்ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+