தமிழகத்தில் இன்று
கோவில்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு: அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இந்து கோவில்களை சிங்கள ராணுவத்தினர் குண்டுவீசி தகர்த்துவருகின்றனர். என்று அங்கிருந்து தப்பிவந்த அகதிகள் வேதனையுடன் கூறினார்கள்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையையடுத்து தொடர்ந்துதமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் வந்த கிரேஸ் ராணி என்ற பெண் நிருபர்களிடம் கூறுகையில், நான் இலங்கையில்ஊர்க்காவல் துறை என்ற இடத்தில் இருந்தேன். நாங்கள் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தோம். 2ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரில் என் கணவர் பலியாகிவிட்டார்.
அப்பொழுது நான் கர்ப்பிணியாக இருந்தேன். சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியதில் என் கருகலைந்துவிட்டது. தற்போது சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துஇருக்கிறது.
சிங்கள ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளின் கைஒங்கிவருவதால், சிங்கள ராணுவத்தினர் இரவு பகலாக விமானம் மூலம் குண்டு வீசி தாக்கி வருகின்றனர். இதில்ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் இந்துக்கள் வழிபடும் கோவில்களை தேடிகண்டுபிடித்து அவற்றின் மீது குண்டுவீசி தாக்கி வருகின்றனர்.இதனால் பல கோவில்கள் இடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. என்னுடைய கடையும் குண்டு வீச்சில் சேதம்அடைந்துள்ளது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications