உயர்வும் தாழ்வும் தொழிலால் இல்லை

Subscribe to Oneindia Tamil

இன்று இந்தியாவில் அரசாங்க அலுவலகங்களில் அதிகாரிகள் செயலை விடத் தங்களைப் பெரிதாக நினைப்பதால்தான் பல செயல்கள்நடப்பதில்லை. இந்த வேலையை நான் செய்வதா? என்று வேலையைத் தாழ்வாக நினைக்கிறார்கள்..!

சில சமயங்களில் தங்கள் ஊழியர்கள் விடுப்பில் போய்விட்டால், சில அதிகாரிகள் அந்த வேலைகளைச் செய்து கொடுப்பது தம் கடமைஎன்று புரியாமல் செயலைக் கொல்லுகிறார்கள். விடுப்பு முடிந்து வந்து அந்த ஊழியர்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.செயலைவிட தன்னை மேலாகக் கருதும் மூட மனோபாவமே இந்தச் சிக்கலின் காரணம்.

வீடு கூட்டுகிறவர் வேலைக்கு வரவில்லை என்றால் குப்பையிலேயே குடியிருக்க முடியமா? நான் எவ்வளவு உயர்ந்த மனிதன். வீடுகூட்டிப் பெருக்குவது தாழ்வான தொழில் என்று கருதுவது பேதமை.தொழிலில் உயர்வு தாழ்வு கிடையாது.

ஒரு தொழிலைச் சரியாகச் செய்வதே உயர்வு. அதைச் சரியாகச் செய்யாமை தாழ்வு அவ்வளவே.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் என்கிறது திருக்குறள்.

வீடு கூட்டிப் பெருக்குவது தாழ்வான தொழில் அல்ல. நான் வீடு கூட்டிப் பெருக்கிய பிறகு குப்பை இருந்து விட்டால் அதுதான் தாழ்வு.நான் தொழிலில் தாழந்து விட்டேன் என்று பொருள். பாத்திரம் கழுவுவது தாழ்வான தொழில் அல்ல. பாத்திரம் கழுவிய பிறகுஅதில் எச்சில் இருந்தால் அதுதான் தாழ்வு.

செயலில் உயர்வு தாழ்வு இல்லை. செயலைச் செய்யும் முறையில் தான் உயர்வு தாழ்வு வருகிறது. எந்தத் தனிமனிதனையும் விடசெயல்தான் முக்கியம். இன்று டிரைவர் வரவில்லை... எனவே அலுவலகம் வர முடியவில்லை என்று ஓர் அதிகாரி சொன்னால் அவர்குற்றவாளி. அவர் அலுவலகம் வர உதவியாக அவருக்குக் காரும், டிரைவரும் கொடுத்தோம். அவர் அலுவலகம் வருதல்என்பதை மிக முக்கியமானதாக கருதியே கார் தரப்பட்டது.

கார் முக்கியமல்ல..டிரைவர் முக்கியமல்ல.. அலுவலகம் வருதலே முக்-கியம். டிரைவர் வரவில்லை என்றால் auto பிடித்தாவதுஅலுவலகத்தில் இருப்பது அவர் கடமை. காந்தி அடிகள் ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். அழைத்துப் போக கார் வரவில்லை. அவர்சைக்கிளில் ஏறி புறப்பட்டு விட்டார்.

கூட்டத்திற்கு போகும் செயல் முக்கியமே ஒழிய

காரா, சைக்கிளா என்பது முக்கியமல்ல என்கிற கர்மயோகிகளே இன்றைய தேசத்தின் தேவை.

தேர் ஓட்டுவது கவுரவக் குறைவான தொழில் என்று கண்ணன் நினைத்தானா? பாரத யுத்தத்தில் தர்மம் வெற்றி பெறுதல் என்கிறசெயல் முக்கியம். அதற்கு அர்ச்சுனன் பக்கத்திலேயே இருத்தல் முக்-கியம். அதற்கு தேரோட்டியாவது தவிர வேறு நல்ல உபாயம்இலலை.

என் அந்தஸ்து என்ன? என் கவுரவம் என்ன? நான் கடவுள்.. நான் போய் ஒரு மனிதனுக்குத் தேரோட்டுவதா? என்று கண்ணன்prestige பார்த்திருந்தால் தர்மத்தை நிலை நாட்டும் பணி நிறைவேறுமா?

இன்று அரசாங்க அதிகாரிகளின் வறட்டு கெளரவத்தில் தேசம் தள்ளாடுகிறது. அவர்கள் காந்தி போல, கண்ணன் போலகர்மயோகிகளாகத் தம்மை ஆக்கினால் தேசம் பாதுகாக்கப்படும். நாம் முக்கியமல்ல. நடக்க வேன்டிய செயலே முக்கியம்.செயலில் உயர்வு தாழ்வு இல்லை. எனவே செயலைச் செய்யும் போது அதில் தயக்கம் கூச்சம் இன்றி முழு நேர்த்தியுடன் செய்ய வேண்டும்.கண்ணன் தேர் ஓட்டியாக இருந்தபோது முழு நேர்த்தியான தேரோட்டியாக இருந்ததற்கு ஓர் உதாரணம் சொல்லட்டுமா?

(வளரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+