உயர்வும் தாழ்வும் தொழிலால் இல்லை

Subscribe to Oneindia Tamil

யாழ். மோதலில் 1000 புலிகள் இறந்ததாக ராணுவம் கூறுகிறது

கொழும்பு:

யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் சண்டையில் 1000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தியதாக்குதலில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

ராணுவச் செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னாண்டோ கூறுகையில், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்குப் போதுமான வீரர்கள் இப்போது இல்லை. சமீபத்தில்யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலில் இறந்த 650 புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

சரசாலையில் மே 22-ம் தேதி 150 விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் கொன்றனர். அங்குள்ள ராணுவ நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்குப்பதில் தருகையில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

சரசாலையில் கொல்லப்பட்ட 68 விடுதலைப் புலிகளின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ் வளைகுடாவில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கை வீரர்களின் மனதில் தைரியம் அதிக அளவு உள்ளது. முன்பை விட கூடுதல் உற்சாகத்துடன்அவர்கள் புலிகளை எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர். நவீன ஆயுதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் பெர்னாண்டோ.

சாவகச்சேரியில் கடும் சண்டை:

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தை விட சாவகச்சேரியில்தான் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் அனிருத்த ரத்வத்தே கூறுகையில், யாழ்ப்பாணம் வளைகுடாவுக்கு கூடுதலாக 4000 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.1995-ம் ஆண்டு ராணுவத்திடம் இழந்த யாழ்ப்பாணத்தைப் பிடிக்க விடுதலைப் புலிகள் கடுமையாக முயன்ற வருவதால் அவர்களை எதிர்க்க இப்படைகள்அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, போரின் வேகம் குறைந்திருப்பதால், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய குடும்பங்கள் மீண்டும் அங்கு திரும்பிக் கொண்டிருப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+