முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
போரீஸ் எல்த்சினைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் :
ரஷ்ய முன்னாள் அதிபர் போரீஸ் எல்த்சினை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்திங்கள்கிழமை சந்தித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவந்துள்ள பில் கிளின்டன், திங்கள்கிழமை போரீஸ் எல்த்சினுடைய வீட்டுக்குச் சென்றுஅவரைச் சந்தித்தார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர்.
ரஷ்யாவுக்கு எதிராக ஏவுகணைப் பாதுகாப்பு முறையை ஏற்படுத்தும் அமெரிக்காவின்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.மேலும், இருவரும் தங்களது பழைய நட்புறவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
எல்த்சின் நல்ல உடல் நலத்துடன் சந்தோஷமாக நல்ல சிந்தனையுடன் உள்ளதாக,அவரைச் சந்தித்த பிறகு நிருபர்களிடம் கிளின்டன் கூறியதாவது.












Click it and Unblock the Notifications