முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
கற்பழிப்புக்குத் தலை...பிக்பாக்கெட்டுக்கு கை...
துபாய்:
இளம் பெண்ணைக் கடத்திக், கற்பழித்த செளதி அரேபிய இளைஞருக்கு மெக்காவில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீது, திருட்டு, மது அருந்தியது, போதைப் பொருள் உட்கொண்டது என பல்வேறு புகார்களும் கூறப்பட்டிருந்தன. இந்ததண்டனையுடன் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை, துபாயில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல, முஸ்லீம்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் பிக்பாக்கெட் அடித்ததாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், நைஜீரியர்ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களது வலது கைகள் துண்டிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. மெக்காவிலேயே இந்த தண்டனையும்நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications