முகத்தில் தெளித்த சாரல்...
நவம்பருக்குள் பொதுத் தேர்தல்: அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அறிவிப்பு
கொழும்பு:
இந்த ஆண்டு நவம்பருக்குள் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். எக் காரணம் கொண்டும்தேர்தல் தள்ளி வைக்கப்படாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கும், சிங்கள சந்தேஷயவுக்கும் திங்கள்கிழமை அவர் அளிதபேட்டி:
இலங்கையில் ஆகஸ்டுக்கு மேல் நவம்பருக்குள் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலைத் தள்ளிவைக்க விரும்பவில்லை.
தேர்தலுக்கு முன் இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள அனைத்தையும் ஜனநாயக முறையிலும்,அரசியலமைப்புச் சட்ட ரீதியாகவும் நீக்க அரசு முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி வெற்றியடையும்என்று நம்புகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைகிறது.
இலங்கையின் வட பகுதியில் புலிகளுக்கும், ராணுத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதுஉண்மைதான். இருப்பினும், மீண்டும் ராணவத்திடம் இலங்கையின் வட பகுதிகள் வந்துவிடும் என்றுநம்புகிறேன். ஆனால், எந்த காலகட்டத்துக்குள் இது சாத்தியம் என்பதை நான் தெரிவிக்க முடியாது.
அதிகாரத்தில் பங்கு கொடுத்து பேச்சு வார்த்தைக்கு வரும்படி புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுயற்சி மேற்கொண்டுள்ள இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது மத்தியஸ்தம் செய்ய வந்துள்ள நார்வே நாட்டுக்கு இந்தியாவும், அண்டைநாடுகளும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications