தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நிலக்கரி ஊழல் வழக்கு: ஜூ-லை 3-ல் நீதிமன்றத்தில் ஆஜராக ஜெ.வுக்கு உத்தரவு

சென்னை:

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் அடுத்த மாதம் 3ம் தேதி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று சென்னை இரண்டாவது சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ.6.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 11 பேர்மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. வழக்கில் 16.6.1999 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டபோது, இவ் வழக்கிலிருந்து ஜெயலலிதா, நெடுஞ்செழியன் ஆகியோரை நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ்,வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும், நெடுஞ்செழியனையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது சரியே என்று தீர்ப்பளித்தார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றநீதிபதிகள், நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது தவறு. அவர் மீண்டும் வழக்கை சந்திக்க வேண்டும். வழக்கை தனிநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி நிலக்கரி ஊழல் வழக்கில் மீண்டும் ஜெயலலிதா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, விசாரணை துவங்கியது. செவ்வாய்க்கிழமை நடந்தஇவ்வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கு மறுவிசாரணை செய்யப்படுவதால் ஜெயலலிதா ஆஜராக உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

அதை ஏற்று அடுத்த மாதம் 3ம் தேதி இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராதாகிருஷ்ணன்உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+