தமிழகத்தில் இன்று
பொள்ளாச்சி அருகே ரூ. 32 கோடி செலவில் காஸ் நிரப்பும் ஆலை
கோவை:
பொள்ளாச்சி அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ. 32 கோடி செலவில் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திரவ பெட்ரோலியம் சமையல் எரிவாயு நிரப்பும்திட்டத்தைத் துவக்கியுள்ளது.
ரூ 32 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த எரிவாயுத் திட்டத்திற்கு 32 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிய இலந்தை என்றகிராமத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலையில் நாள் ஒன்றிற்கு 7 ஆயிரம் சிலிண்டர் காஸ் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநயோகிக்கப்படும்.
இங்கு நிரப்பப்படும் காஸ், கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கேரள மாநிலப் பகுதிகளிலும்விநயோகிக்கப்படும்.
பொதுமக்களுக்கு காஸ் விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவே இந்த தொழிற்சாலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசிடமிருந்து 32 ஏக்கர் நிலத்தை ரூ.20.7 லட்சத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாங்கியுள்ளது. இதற்கான காசோலை கோவைமாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொழிற்சாலை செயல்படத் துவங்கும்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications