தமிழகத்தில் இன்று
தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்
கோவை:
தமிழகத்தில் 12 தனியார் நிறுவனங்களின் உதவியுடன் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடுவீரசாமி தெரிவித்தார்.
திருப்பூரில் துணை மின் நிலையத்தை திறந்து வைத்து ஆற்காடு வீராசாமி தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 12 தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் உதவியுடன் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை தீரும். எனவே, எஞ்சியுள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கும் வழங்க முடியும் என்றுஆற்காடு வீரசாமி தெரிவித்தார்.
விழாவில் மாநில விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, எம்.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications