போதை ஒழிப்பு! முதல் மாநாட்டின்.. முதல் தீர்மானமே அசத்தல்! அடித்து தூக்கும் அண்ணாமலை
கோயம்புத்தூர்: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பின் முதல் மாநாட்டை கோவை பொள்ளாச்சியில் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் முதல் தீர்மானம் போதைக்கு எதிராக போடப்பட்டிருக்கிறது.
மாவட்டம் தோறும் போதை தடுப்புக்குழு உருவாக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் பாஜக விட்டுவிட்டு தனித்த அரசியலில் அண்ணாமலை தீவிரமாக களமிறங்கியிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

தமிழகத்தில் போதைப்பொருள்
தமிழகம் இன்று எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை போதைப்பொருள்தான். திமுக ஆட்சியிலும் சரி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் சரி! ஆட்சியாளர்களுக்கு ரொம்பவும் தலைவலியை கொடுத்த மேட்டர் இந்த போதைப்பொருள் பிரச்சனைதான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை விமர்சிக்க திமுக எடுத்த ஆயுதம் இது. அதேபோல திமுக ஆட்சியை வீழ்த்த தவெக இதே வெப்பனைதான் கையல் எடுத்திருந்தது. தற்போது அண்ணாமலையும் களத்தில் இறங்கி.. இந்த விஷயத்தை பெரியதாக பேச தொடங்கியிருக்கிறார்.
பாஜகவை விட்டு வெளியில் வந்த பின்னர் அண்ணாமலை தனது 'வீ த லீடர்ஸ்' அமைப்பை பலப்படுத்த தொடங்கினார். 50 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்தவுடன் இதன் அரசியல் செயல்பாடுகள் தொடங்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இப்போது வரை 19 லட்சம் பேர் இதில் இணைந்திருக்கின்றனர். இருப்பினும் மாநாட்டை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications